Recipe 35 :நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி | Amla pickle in Tamil | Nellikaai oorukai


 

பூரி & தக்காளி சாம்பார்...

 பூரி & தக்காளி சாம்பார்...

நிறைய பேர் பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ் எதுனா கேட்டா குருமா,பூரி மசால்னு சொல்வீங்க,ஆனா எனக்கு பூரி & சாம்பார் காம்போ தான் அல்டிமேட்னு சொல்வேன்.
வீட்லயும் பூரி மசால் காம்போ செஞ்சாலும் எனக்கு பிடிச்ச மாதிரி சாம்பார் காம்போ செஞ்சு சாப்பிடுவேன்.



எல்லோருக்கும் இந்த காம்போ கொஞ்சம் weird இருக்க மாதிரி தோனாலும்,ஆனா ஒரு முறை செஞ்சு பார்த்தா மசாலும்,குருமாவும் தூர நின்னு வேடிக்கை பார்க்கனும்.

வார இறுதி நாட்களில் ஞாயிற்றுகிழமை காலை டிபனாக  அம்மா கட்டாயம் பூரி சுடுவாங்க, அப்போ இந்த சாம்பார் செஞ்சு கொடுப்பாங்க, அதுக்கு நான் ரொம்ப அடிமை. எத்தனை பூரி சாப்பிடுவோம்னு கணக்கே தெரியாது. அதுவும் அம்மா செய்ற அந்த தக்காளி சாம்பார் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு.

இதுவும் எங்கூரு  இந்தியன் காபி ஹவுஸ் ஸ்பெஷல்னு கூட சொல்லலாம்.எங்க வீட்ல தான் நான் பூரி & சாம்பார் காம்போ சாப்பிட்ருகேன்,அதன் பிறகே இந்தியன் காபி ஹவுஸ் ஹோட்டல்லயும் இந்த காம்போ ஸ்பெஷ்ல்னு பின்னாட்களில் தெரிந்துகொண்டேன்.

பொதுவா டிபனுக்கு செய்ற சாம்பார் பாசிபருப்புல செய்றது தான் தனி சுவை,அதுலயும் புளி சேர்க்க கூடாது அப்படி சேர்த்தாலே எனக்கு சாப்பாட்டுக்கு செய்ற சாம்பார் போல தான் தோனும்.அந்த புளிப்பு சுவையை ஈடு செய்ய தான் அதுல நிறைய தக்காளி சேர்ப்பது.

பாசிபருப்பு,வெங்காயம்,தக்காளி(நிறைய),பச்சை மிளகாய்(காரத்திற்கேற்ப),(விரும்பினால் பூண்டு ) இது எல்லாத்தையும் ஒன்னா வேக வச்சு கடைஞ்சு தாளிச்சு ,கொத்தமல்லி தழை சேர்த்தா சிம்பிளான சாம்பார் ரெடி.தண்ணி மட்டும் அட்ஜஸ்ட் செஞ்சுக்கனும் ஏன்னா ஆறிய பிறகு திக்காகிடும்.

இந்த ரெசிபில நான் வெங்காயம்,பூண்டு சேர்க்காம செஞ்சுருக்கேன்.  இப்போ என் பிள்ளைகளுக்கும் இந்த காம்போ தான் பிடிக்குது.

இந்த சாம்பார் இட்லி,தோசைக்கும் பொருந்தும்.

அதும் சுட சுட பூரியோடு, சூடான சாம்பாரை ஊற்றி சாப்பிட, சுவையோ சுவை