நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல்:


 நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல்:

தேவையான பொருட்கள்
மாங்காய் - 1
வாழைக்காய் - 1
முருங்கைக்காய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
கத்திரிக்காய் - 2
வெள்ளரிக்காய் - 1
புடலங்காய் - 1/2
கருணைக்கிழங்கு - 1/2
வெள்ளை பூசணிக்காய் - ½
சின்ன வெங்காயம் - 4
தேங்காய் எண்ணெய்
சீரகம் – ½ டீஸ்பூன்
பூண்டு – 2
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
தேங்காய் – அரை மூடி

செய்முறை
முதலில் காய்கறிகளைத் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி அதை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
பின்பு காய்கறிகளைக் கடாயில் போட்டு ½ கப் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
இதற்கிடையில் மசாலாவை அரைத்துக் கொள்ளவும். அதற்கு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளவும்.
இதை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அரைத்த மசாலாவை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கலந்து விடவும்.
மேலே கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்தும் இதில் சேர்க்கலாம்.
மசாலா, காய்கறிகளுடன் நன்கு சேர்ந்து அவியல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
இப்போது சூப்பரான நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் தயார்.

குறிப்பு: அவியலில் மாங்காய் சேர்க்காமல் இருந்தால் புளிப்புக்கு சிறிதளவு தயிர் சேர்த்து கொள்ளவும்.

பனீர் மசாலா

 பனீர் மசாலா

தேவையான பொருட்கள்


பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1.வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

2.முந்திரியையும் தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.

3.கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

4.பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

5.அவை லேசாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

6.அவை நன்றாக சுருண்டு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

7.தக்காளி விழுது கெட்டியாக மாறும் போது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

8.பின் கரம்மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.

9.முந்திரி விழுது தக்காளி கலவையோடு நன்கு சேர்ந்து வந்ததும் உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

10.இப்போது சூட்டை குறைத்து காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலந்து 2 நிமிடங்கள் லேசாக கொதி வந்ததும் இறக்கவும்.‌
ஈஸியான சுலபமான பனீர் மசாலா தயார்.

ப்ரோக்கோலி பொரியல்

 ப்ரோக்கோலி பொரியல்

தேவையான பொருட்கள்

ப்ரோக்கோலி - 2
வெங்காயம் - 1/4 கப், பொடியாக நறுக்கியது
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டு பற்கள் - 4
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 அல்லது 2 டேபிள் ஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை


1.ப்ரோக்கோலியை நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2.ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ப்ரோக்கோலி பூக்களை சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் தண்ணீரில் ஒரு முறை அலசிக் கொள்ளவும்.

3.ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, பூண்டு பற்கள் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து பல்ஸ் மோடில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

4.கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை மற்றும் ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.

5.பின் சிறிது மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். ப்ரோக்கோலியில் இருக்கும் நீர் பிரிந்து நன்றாக வற்றியதும் கொர கொரப்பாக அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டவும். அவை ப்ரோக்கோலியோடு  சேர்ந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடாக பரிமாறவும்.