பனீர் மசாலா
தேவையான பொருட்கள்
பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1.வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
2.முந்திரியையும் தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
3.கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
4.பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
5.அவை லேசாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6.அவை நன்றாக சுருண்டு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
7.தக்காளி விழுது கெட்டியாக மாறும் போது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
8.பின் கரம்மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
9.முந்திரி விழுது தக்காளி கலவையோடு நன்கு சேர்ந்து வந்ததும் உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
10.இப்போது சூட்டை குறைத்து காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலந்து 2 நிமிடங்கள் லேசாக கொதி வந்ததும் இறக்கவும்.
ஈஸியான சுலபமான பனீர் மசாலா தயார்.
பனீர் மசாலா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment