எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே!
எலுமிச்சை பழம் இருந்தால் போதும் உச்சி முதல் பாதம் வரை அழகை அதிகரிக்கலாம். ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் முதல் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் எலுமிச்சையின் பயன் தவிர்க்கமுடியாதது.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின்சி, கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம் போன்றவை சருமத்தை மிளிரவைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறுக்கு சற்றும் குறைந்ததில்லை எலுமிச்சை தோல் தரும் நன்மைகள். எலுமிச்சை கிடைக்கும் காலங்களில் இதன் தோலை பொடித்து வைத்துகொள்ளுங்கள். எப்படி சத்து குறையாமல் பொடித்து வைப்பது, அதை எப்படி பயன்படுத்துவது தெரிந்துகொள்வோமா?
எலுமிச்சை தோலில் பொடி
எலுமிச்சை அதிகம் கிடைக்கும் காலங்களில் 50 பழங்களை வாங்கி இரண்டாக நறுக்கி சாறு பிழியாமல் அப்படியே வெயிலில் காய வையுங்கள். சாறை தோல் இழுத்து கொள்ளும். தோல் காய வைத்ததும் அதை நறுக்கி மிஷினில் கொடுத்து பொடியாக்குங்கள். இதை மிக்ஸியில் போட வேண்டாம். பொடியாகாது.
முட்டை சாப்பிட பயமா இருந்தா முகத்துக்கு பயன்படுத்துங்க.. அழகாவாச்சும் இருப்பீங்க..
இந்த பொடியை சலித்து எடுத்து வைத்துகொள்ளுங்கள். சுகாதாரமான முறையில் பொடித்திருந்தால் இதை உணவில் கூட சேர்க்கலாம். எலுமிச்சை புளிப்பு நிறைந்திருக்கும். வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் சேர்த்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இப்போது இதை எப்படி எதற்கு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
முகப்பருக்கள்
முகத்தில் முகப்பருக்கள் இருப்பவர்கள் தினமும் காலையில் முகத்தில் எலுமிச்சை தோலில் பேக் போட்டு வந்தால் பருக்கள் குறையும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை தோல் பொடியை 5 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் குழைத்து கொள்ளவும். பிறகு பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காயும் வரை விட்டு பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி விடவும்.
எலுமிச்சை சிட்ரிக் அமிலம் நிறைந்தது என்பதால் நேரடியாக முகத்துக்கு போடக்கூடாது என்றும் சொல்வார்கள். ஆனால் எலுமிச்சை தோல் பொடியை பாலில் கலந்து குழைத்து போடும் போது சருமத்தில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். வேறு பாதிப்பும் வராமல் இருக்கும்.
முகத்தில் இறந்த செல்களை நீக்க
ஓட்ஸ் பொடி - 2 டீஸ்பூன்,
எலுமிச்சை பொடி - 2 டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்,
பன்னீர் - 1 டீஸ்பூன்
ஓட்ஸ் பொடியுடன் சம அளவு எலுமிச்சை பொடி கலந்து ஒரு டீஸ்பூன் தேன் பன்னீர் கலந்து நன்றாக பேஸ்ட் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.
இறந்த செல்கள் சருமத்துவாரங்களை அடைக்கும் போதுதான் பருக்கள், முகத்தின் நிறம் மங்குதல், பருக்கள் அடங்கினாலும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் அடுக்கடுக்காய் வரும். இதை தவிர்க்க அவ்வபோது எலுமிச்சை பொடி சேர்த்து முகத்துக்கு ஸ்க்ரப் செய்வது பலன் தரும்.
மெனிக்யூர் (Manicure) செய்யும் போது
கை நகங்கள் பொலிவாக அழகான தோற்றத்துடன் இருக்க மெனிக்யூர் செய்வதுண்டு. வீட்டில் மெனிக்யூர் செய்யும் போது கை விரல் நகங்களை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை பொடி கலந்து பயன்படுத்தலாம். மிதமான வெந்நீரில் எலுமிச்சை பொடி சேர்த்து பத்து நிமிடங்கள் விரல் நகங்களை வெந்நீரில் ஊறவிட்டு 15 நிமிடங்கள் கழித்து நகங்களை தேய்த்து கழுவினால் நகங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி வெள்ளை பளிச் என்று இருக்கும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் பளிச் வெண்மையாக கூடுதலாக ஜொலிக்கும்.
பெடிக்யூர் செய்யும் போது
இயற்கை ஹேர்டை என்னும் ஹென்னா பயன்படுத்தும் போது ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பொடி கலந்து பயன்படுத்தலாம். கெமிக்கல் அதிகம் இருந்தாலும் அதில் இருக்கும் நச்சுகளை எலுமிச்சை நீக்கிவிடும். இள நரை பிரச்சனை அதிகரிக்காமல் இருக்கவும், உஷ்ணத்தை குறைக்கவும் கூட உதவும். கூந்தல் பொலிவாகவும், பளபளவென்றும் வைக்கும். முடியின் கருமையை அதிகரிக்க உதவும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும். முடி உதிர்தலை தடுக்கும். இதையெல்லாம் விட கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும்.
முடி கருப்பா இருக்க நெல்லிக்காய் ஹேர்டையா.. யூஸ் பண்ணிபாருங்க, விடவே மாட்டீங்க...
இதை அனைத்தையும் எலுமிச்சை பொடியால் சாத்தியமே என்பதை பயன்படுத்த தொடங்கினால் நீங்களும் உணர்வீர்கள். எலுமிச்சை சாறை நேரடியாக முகத்தின் மீது பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சலும், ஒவ்வாமையும் சிலருக்கு உண்டாகும். ஆனால் எலுமிச்சை பொடியை எல்லா அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment