Monday, November 4, 2024

எலுமிச்சை / Lemon / Health benefits of Lemon / Home Remedies

 பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டைவலி, வாந்தி இவற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. காலரா கிருமியை அழிக்கும். பல் நோய்களை தீர்க்கும். வாய் நாற்றம், சரும வியாதி, டான்சில், வாய்ப்புண், தேள்கடி, விசம், மஞ்சள் காமாலை, வீக்கம், வாயுத்தொல்லை, பசியீனம், நகசுற்று, யானைக்கால் வியாதி, இவை அனைத்திற்கும் நல்ல குணத்தை கொடுக்கும்.

ஓட்டலில் சாப்பிடுவோர்


  சுத்தமற்ற வேகாத சமயலை சாப்பிட நேர்ந்தால் ஏற்படகூடிய பல தொல்லைகளை நீக்க 2 எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து, நல்ல பெருங்காயத்தைக் கலந்து, உப்பு சேர்த்துத் தினமும் பருகலாம்.
கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலிற்கு உண்டு. எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ச்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.


களைப்பு தீர
 களைப்பை நீக்க ஒரு எலுமிச்சை கடித்து சாறை குடிக்கவோ, பிழிந்து நாட்டு  சர்க்கரை அல்லது உப்பு சேர்த்தோ பருக உடனடி தெம்பு கிடைக்கும்.

Friday, October 25, 2024

💐சீரகத்தின் மருத்துவக் குணங்கள்..!!??




சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். 

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.


சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்தைத் தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

 

💐💐💐💐

Friday, August 30, 2024

Instant South Indian Style Curry Leaf Thokku Pickle Instant Currry leaf Thokku | கறிவேப்பில்லைதொக்கு


 

உங்கள் வீட்டில் இருக்கும் கரப்பானை விரட்ட Home Remedies

  உங்கள் வீட்டில் இருக்கும் கரப்பானை விரட்ட
குப்பைகளை நீக்காமல் விட்டாலோ, தூசிகளை அவ்வப்போது தட்டாமல் விட்டாலோ கரப்பான்கள் வர வாய்ப்பு உள்ளது. உணவு பண்டங்கள் எங்கு உள்ளதோ அதை உண்ண கரப்பான்கள் வந்துவிடும். இவை சாக்கடை, குப்பைக் கூடைகள், குழாய் ஓட்டைகள் ஆகிய இடங்களில் வசிக்கும். இது நாம் இருக்கும் வீட்டில் குடியேறாமல் இருக்க சில டிப்ஸ்.

கிராம்பு
கரப்பான் பூச்சி புழங்கும் இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யவும். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. முக்கியமாக அவ்வப்போது கிராம்பை மாற்ற வேண்டும்.

சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா
சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை பாதிக்கு பாதி கலந்து, கரப்பான் பூச்சி புழங்கும் இடத்தில் தூவவேண்டும், கரப்பான் பூச்சி அந்த இனிப்பை சாப்பிடவரும். சாப்பிட்ட கரப்பான்கள் உடனே இறந்துவிடும்.

பிரியாணி இலை
பிரியாணி இலையை நன்றாக பொடி செய்யவும். கரப்பான் பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் அப்பொடியைத் தூவவும். இவ்விலையின் வாசனையால் பொடி தூவிய இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கரப்பான் பூச்சி அண்டாமல் இருக்கும்.

மிளகு, வெங்காயம் மற்றும் பூண்டு கலவை
மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட்டை ஒன்றாக கலக்கவும். தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். இதனை கரப்பான்கள் வசிக்கும் இடங்களில் ஸ்பிரே செய்து அவற்றைக் அகற்றலாம்.

போரிக் ஆசிட்
கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசையவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வுருண்டைகளை சாப்பிட்ட கரப்பான்கள், இறந்துவிடும்.

Thursday, July 4, 2024

எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே!

 

 

 எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே!


எலுமிச்சை பழம் இருந்தால் போதும் உச்சி முதல் பாதம் வரை அழகை அதிகரிக்கலாம். ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் முதல் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் எலுமிச்சையின் பயன் தவிர்க்கமுடியாதது.

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின்சி, கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம் போன்றவை சருமத்தை மிளிரவைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறுக்கு சற்றும் குறைந்ததில்லை எலுமிச்சை தோல் தரும் நன்மைகள். எலுமிச்சை கிடைக்கும் காலங்களில் இதன் தோலை பொடித்து வைத்துகொள்ளுங்கள். எப்படி சத்து குறையாமல் பொடித்து வைப்பது, அதை எப்படி பயன்படுத்துவது தெரிந்துகொள்வோமா?


எலுமிச்சை தோலில் பொடி

எலுமிச்சை அதிகம் கிடைக்கும் காலங்களில் 50 பழங்களை வாங்கி இரண்டாக நறுக்கி சாறு பிழியாமல் அப்படியே வெயிலில் காய வையுங்கள். சாறை தோல் இழுத்து கொள்ளும். தோல் காய வைத்ததும் அதை நறுக்கி மிஷினில் கொடுத்து பொடியாக்குங்கள். இதை மிக்ஸியில் போட வேண்டாம். பொடியாகாது.

முட்டை சாப்பிட பயமா இருந்தா முகத்துக்கு பயன்படுத்துங்க.. அழகாவாச்சும் இருப்பீங்க..

இந்த பொடியை சலித்து எடுத்து வைத்துகொள்ளுங்கள். சுகாதாரமான முறையில் பொடித்திருந்தால் இதை உணவில் கூட சேர்க்கலாம். எலுமிச்சை புளிப்பு நிறைந்திருக்கும். வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் சேர்த்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இப்போது இதை எப்படி எதற்கு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

முகப்பருக்கள்

முகத்தில் முகப்பருக்கள் இருப்பவர்கள் தினமும் காலையில் முகத்தில் எலுமிச்சை தோலில் பேக் போட்டு வந்தால் பருக்கள் குறையும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை தோல் பொடியை 5 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் குழைத்து கொள்ளவும். பிறகு பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காயும் வரை விட்டு பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி விடவும்.

எலுமிச்சை சிட்ரிக் அமிலம் நிறைந்தது என்பதால் நேரடியாக முகத்துக்கு போடக்கூடாது என்றும் சொல்வார்கள். ஆனால் எலுமிச்சை தோல் பொடியை பாலில் கலந்து குழைத்து போடும் போது சருமத்தில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். வேறு பாதிப்பும் வராமல் இருக்கும்.

​முகத்தில் இறந்த செல்களை நீக்க



ஓட்ஸ் பொடி - 2 டீஸ்பூன்,

எலுமிச்சை பொடி - 2 டீஸ்பூன்,

தேன் - 1 டீஸ்பூன்,

பன்னீர் - 1 டீஸ்பூன்

ஓட்ஸ் பொடியுடன் சம அளவு எலுமிச்சை பொடி கலந்து ஒரு டீஸ்பூன் தேன் பன்னீர் கலந்து நன்றாக பேஸ்ட் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

இறந்த செல்கள் சருமத்துவாரங்களை அடைக்கும் போதுதான் பருக்கள், முகத்தின் நிறம் மங்குதல், பருக்கள் அடங்கினாலும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் அடுக்கடுக்காய் வரும். இதை தவிர்க்க அவ்வபோது எலுமிச்சை பொடி சேர்த்து முகத்துக்கு ஸ்க்ரப் செய்வது பலன் தரும்.


மெனிக்யூர் (Manicure) செய்யும் போது

கை நகங்கள் பொலிவாக அழகான தோற்றத்துடன் இருக்க மெனிக்யூர் செய்வதுண்டு. வீட்டில் மெனிக்யூர் செய்யும் போது கை விரல் நகங்களை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை பொடி கலந்து பயன்படுத்தலாம். மிதமான வெந்நீரில் எலுமிச்சை பொடி சேர்த்து பத்து நிமிடங்கள் விரல் நகங்களை வெந்நீரில் ஊறவிட்டு 15 நிமிடங்கள் கழித்து நகங்களை தேய்த்து கழுவினால் நகங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி வெள்ளை பளிச் என்று இருக்கும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் பளிச் வெண்மையாக கூடுதலாக ஜொலிக்கும்.


​பெடிக்யூர் செய்யும் போது



இயற்கை ஹேர்டை என்னும் ஹென்னா பயன்படுத்தும் போது ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பொடி கலந்து பயன்படுத்தலாம். கெமிக்கல் அதிகம் இருந்தாலும் அதில் இருக்கும் நச்சுகளை எலுமிச்சை நீக்கிவிடும். இள நரை பிரச்சனை அதிகரிக்காமல் இருக்கவும், உஷ்ணத்தை குறைக்கவும் கூட உதவும். கூந்தல் பொலிவாகவும், பளபளவென்றும் வைக்கும். முடியின் கருமையை அதிகரிக்க உதவும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும். முடி உதிர்தலை தடுக்கும். இதையெல்லாம் விட கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும்.


முடி கருப்பா இருக்க நெல்லிக்காய் ஹேர்டையா.. யூஸ் பண்ணிபாருங்க, விடவே மாட்டீங்க...


இதை அனைத்தையும் எலுமிச்சை பொடியால் சாத்தியமே என்பதை பயன்படுத்த தொடங்கினால் நீங்களும் உணர்வீர்கள். எலுமிச்சை சாறை நேரடியாக முகத்தின் மீது பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சலும், ஒவ்வாமையும் சிலருக்கு உண்டாகும். ஆனால் எலுமிச்சை பொடியை எல்லா அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தலாம்.

சம்மர் ஸ்பெஷல்: உடலை குளிர்ச்சியாக்கும் நுங்கு!! நுங்கின் சிறப்புகள் !

 சம்மர் ஸ்பெஷல்: உடலை குளிர்ச்சியாக்கும் நுங்கு!!
நுங்கின் சிறப்புகள் !


 
👉கோடைக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது.

👉உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.

👉இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும், இது உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

நுங்கின் பயன்கள் :


👉நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.

👉நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

👉 நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.

👉 நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.

👉உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.

👉கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

👉இரத்தச்சோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.

👉நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.

👉பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

👉நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

👉கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.

👉பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்குரு மறையும்.

👉நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

Friday, May 31, 2024

நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல்:


 நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல்:

தேவையான பொருட்கள்
மாங்காய் - 1
வாழைக்காய் - 1
முருங்கைக்காய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
கத்திரிக்காய் - 2
வெள்ளரிக்காய் - 1
புடலங்காய் - 1/2
கருணைக்கிழங்கு - 1/2
வெள்ளை பூசணிக்காய் - ½
சின்ன வெங்காயம் - 4
தேங்காய் எண்ணெய்
சீரகம் – ½ டீஸ்பூன்
பூண்டு – 2
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
தேங்காய் – அரை மூடி

செய்முறை
முதலில் காய்கறிகளைத் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி அதை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
பின்பு காய்கறிகளைக் கடாயில் போட்டு ½ கப் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
இதற்கிடையில் மசாலாவை அரைத்துக் கொள்ளவும். அதற்கு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளவும்.
இதை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அரைத்த மசாலாவை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கலந்து விடவும்.
மேலே கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்தும் இதில் சேர்க்கலாம்.
மசாலா, காய்கறிகளுடன் நன்கு சேர்ந்து அவியல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
இப்போது சூப்பரான நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் தயார்.

குறிப்பு: அவியலில் மாங்காய் சேர்க்காமல் இருந்தால் புளிப்புக்கு சிறிதளவு தயிர் சேர்த்து கொள்ளவும்.

பனீர் மசாலா

 பனீர் மசாலா

தேவையான பொருட்கள்


பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1.வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

2.முந்திரியையும் தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.

3.கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

4.பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

5.அவை லேசாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

6.அவை நன்றாக சுருண்டு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

7.தக்காளி விழுது கெட்டியாக மாறும் போது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

8.பின் கரம்மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.

9.முந்திரி விழுது தக்காளி கலவையோடு நன்கு சேர்ந்து வந்ததும் உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

10.இப்போது சூட்டை குறைத்து காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலந்து 2 நிமிடங்கள் லேசாக கொதி வந்ததும் இறக்கவும்.‌
ஈஸியான சுலபமான பனீர் மசாலா தயார்.

ப்ரோக்கோலி பொரியல்

 ப்ரோக்கோலி பொரியல்

தேவையான பொருட்கள்

ப்ரோக்கோலி - 2
வெங்காயம் - 1/4 கப், பொடியாக நறுக்கியது
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டு பற்கள் - 4
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 அல்லது 2 டேபிள் ஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை


1.ப்ரோக்கோலியை நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2.ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ப்ரோக்கோலி பூக்களை சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் தண்ணீரில் ஒரு முறை அலசிக் கொள்ளவும்.

3.ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, பூண்டு பற்கள் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து பல்ஸ் மோடில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

4.கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை மற்றும் ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.

5.பின் சிறிது மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். ப்ரோக்கோலியில் இருக்கும் நீர் பிரிந்து நன்றாக வற்றியதும் கொர கொரப்பாக அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டவும். அவை ப்ரோக்கோலியோடு  சேர்ந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடாக பரிமாறவும்.

Tuesday, April 30, 2024

Recipe 35 :நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி | Amla pickle in Tamil | Nellikaai oorukai


 

பூரி & தக்காளி சாம்பார்...

 பூரி & தக்காளி சாம்பார்...

நிறைய பேர் பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ் எதுனா கேட்டா குருமா,பூரி மசால்னு சொல்வீங்க,ஆனா எனக்கு பூரி & சாம்பார் காம்போ தான் அல்டிமேட்னு சொல்வேன்.
வீட்லயும் பூரி மசால் காம்போ செஞ்சாலும் எனக்கு பிடிச்ச மாதிரி சாம்பார் காம்போ செஞ்சு சாப்பிடுவேன்.



எல்லோருக்கும் இந்த காம்போ கொஞ்சம் weird இருக்க மாதிரி தோனாலும்,ஆனா ஒரு முறை செஞ்சு பார்த்தா மசாலும்,குருமாவும் தூர நின்னு வேடிக்கை பார்க்கனும்.

வார இறுதி நாட்களில் ஞாயிற்றுகிழமை காலை டிபனாக  அம்மா கட்டாயம் பூரி சுடுவாங்க, அப்போ இந்த சாம்பார் செஞ்சு கொடுப்பாங்க, அதுக்கு நான் ரொம்ப அடிமை. எத்தனை பூரி சாப்பிடுவோம்னு கணக்கே தெரியாது. அதுவும் அம்மா செய்ற அந்த தக்காளி சாம்பார் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு.

இதுவும் எங்கூரு  இந்தியன் காபி ஹவுஸ் ஸ்பெஷல்னு கூட சொல்லலாம்.எங்க வீட்ல தான் நான் பூரி & சாம்பார் காம்போ சாப்பிட்ருகேன்,அதன் பிறகே இந்தியன் காபி ஹவுஸ் ஹோட்டல்லயும் இந்த காம்போ ஸ்பெஷ்ல்னு பின்னாட்களில் தெரிந்துகொண்டேன்.

பொதுவா டிபனுக்கு செய்ற சாம்பார் பாசிபருப்புல செய்றது தான் தனி சுவை,அதுலயும் புளி சேர்க்க கூடாது அப்படி சேர்த்தாலே எனக்கு சாப்பாட்டுக்கு செய்ற சாம்பார் போல தான் தோனும்.அந்த புளிப்பு சுவையை ஈடு செய்ய தான் அதுல நிறைய தக்காளி சேர்ப்பது.

பாசிபருப்பு,வெங்காயம்,தக்காளி(நிறைய),பச்சை மிளகாய்(காரத்திற்கேற்ப),(விரும்பினால் பூண்டு ) இது எல்லாத்தையும் ஒன்னா வேக வச்சு கடைஞ்சு தாளிச்சு ,கொத்தமல்லி தழை சேர்த்தா சிம்பிளான சாம்பார் ரெடி.தண்ணி மட்டும் அட்ஜஸ்ட் செஞ்சுக்கனும் ஏன்னா ஆறிய பிறகு திக்காகிடும்.

இந்த ரெசிபில நான் வெங்காயம்,பூண்டு சேர்க்காம செஞ்சுருக்கேன்.  இப்போ என் பிள்ளைகளுக்கும் இந்த காம்போ தான் பிடிக்குது.

இந்த சாம்பார் இட்லி,தோசைக்கும் பொருந்தும்.

அதும் சுட சுட பூரியோடு, சூடான சாம்பாரை ஊற்றி சாப்பிட, சுவையோ சுவை